நாயகனாக அறிமுகமாகும் விக்கல்ஸ் விக்ரம்: ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் சுவாரஸ்யமான தொடக்கம்

Web Ads

சமூக வலைதளங்களில் ‘விக்கல்ஸ்’ பக்கத்தின் மூலம் பிரபலமாகி, பின்னர் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் வாயிலாக பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்ட ஸ்டாண்ட் அப் காமெடியன் விக்ரம், தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கே.சி. குரு இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு ‘லைட் வெயிட் பேபி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹிதா ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்தப் படம் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனுக்கும், ஒரு பெண் பாடி பில்டருக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்ட ஒரு கலகலப்பான ‘ரொமாண்டிக் காமெடி’ திரைப்படமாகும். இதில் ஃபிட்னஸ் மாடல் ஆர்த்தி கிருஷ்ணா நாயகியாக நடிக்கிறார். சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்கிறார். சாகர் சந்தேஷ் மற்றும் ஜி. திம்மா ரெட்டி ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

தன்னுடைய அறிமுகம் குறித்துப் பேசிய விக்ரம், 2016-ல் நாடகக் கலைஞராகத் தொடங்கி, சமூக வலைதளங்கள் மற்றும் பிக் பாஸ் மூலம் கிடைத்த புகழே தனக்கு இந்த வாய்ப்பைத் தேடித்தந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். படத்தின் போஸ்டரில் மைக், ஸ்டாண்ட் மற்றும் வெயிட் தூக்கும் உபகரணங்கள் இருப்பது கதையின் தன்மையை விளக்குவதாகவும், வித்யாசமான இந்தக் கதைக்களம் ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.