Vijay Tv Tweet About BB4
Vijay Tv Tweet About BB4

பிக் பாஸ் சீசன் 4 குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக விஜய் டிவி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Vijay Tv Tweet About BB4 : தமிழ் சின்னத்திரையில் பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சி 3 சீசன்களை நிறைவு செய்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 4ல் என்ட்ரி கொடுக்கும் அஜித் பட நாயகி – வெளியான அதிரடி தகவல்.!!

விரைவில் 4வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான போட்டியாளர்கள் யார் யார் என்பதை தேர்வு செய்து அவர்கள் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் கூடிய விரைவில் இந்த நிகழ்ச்சி ஒன்றில் இருந்து ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என விஜய் டிவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அக்டோபர் நான்காம் தேதி முதல் ஒளிபரப்பாக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளி வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.