மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு சூப்பர் ஹிட் சீரியல்கள் நிறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Tv Serials Update : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிற்குமான சூட்டிங் நடத்த முடியாமல் இருந்து வருகிறது.

ரசிகர்கள் அதிர்ச்சி.. மீண்டும் நிறுத்தப்படும் விஜய் டிவி 2 சூப்பர் ஹிட் சீரியல்கள்

ஏற்கனவே பல சீரியல்களில் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் பாரதிகண்ணம்மா, ராஜா ராணி 2 உள்ளிட்ட சீரியல்களின் புதிய எபிசோட் இல்லாமல் நிறுத்தப்படும் என கூறப்படுகிறது.

அதற்கு பதிலாக இந்த நேரத்தில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி இரண்டு சீரியலில் மகா சங்கமம் மீண்டும் ஒளிபரப்பப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.