Vijay to act in wheel chair like Ajith

Vijay to act in wheel chair Like Ajith :

தளபதி 63. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று அண்மையில் வெளியானது. அதில் விஜய் வீல் சேரில் அடிப்பட்டு இருந்தது போன்று இருந்தது.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

வெங்கட் பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுதான் – வெளிவந்த உறுதியானத் தகவல்!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இதிலிருந்து ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று அண்மையில் வெளியானது. அதில் விஜய் வீல் சேரில் அடிப்பட்டு இருந்தது போன்று இருந்தது. படத்தின் கிளைமாக்ஸில் பெரும்பகுதியில் விஜய் இப்படித்தான் இருப்பாராம்.

அஜித் வரலாறு படத்தில் பாதி படத்தில் வீல் சேரில் இருந்தபடியே நடித்திருப்பார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி. தற்போது அதே செண்டிமெண்ட் விஜய்க்கு கைக்கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.