Vijay Son Sanjay Future Plan

விஜயின் மகனுக்கு ஹீரோவாக வேண்டும் என்பதை விட இதில் தான் ஆர்வம் அதிகம் என கூறியுள்ளார் மாஸ்டர் பட தயாரிப்பாளர் பிரிட்டோ.

Vijay Son Sanjay Future Plan : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை விஜய்யின் உறவினரான பிரிட்டோ தயாரித்துள்ளார். இவர் தற்போது பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் பல விஷயங்களை பேசி உள்ளார். குறிப்பாக மாஸ்டர் படம் OTT-யில் வெளியாக வாய்ப்பு உள்ளதா எனக் கேட்டதற்கு நிச்சயம் இல்லை. எவ்வளவு நாளானாலும் தியேட்டர் திறந்த பிறகு தான் இந்த படம் ரிலீசாகும் என கூறியுள்ளார்.

படு கவர்ச்சியில் பலான இடம் தெரிய போஸ், ஒட்டுமொத்த ரசிகர்களையும் திக்குமுக்காட வைத்த ஐஸ்வர்யா தத்தா – புகைப்படத்துடன்!

மேலும் அவரிடம் விஜய்யின் மகன் சஞ்சய் உங்களின் தயாரிப்பில் ஹீரோவாக இருப்பதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. அது உண்மையா என கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பிரிட்டோ அப்படி எந்த ஒரு பேச்சும் இதுவரை நாங்கள் பேசவில்லை. விஜய் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் படித்து வருகிறார். அவருக்கு இயக்குனராக வேண்டும் என்று தான் ஆசை. படித்து முடித்து வந்த பிறகு ஹீரோவாக ஆவாரா? இயக்குனர் ஆவாரா? என்பது அவருக்கு தான் தெரியும்.

இதுநாள் வரை நானும் விஜய்யும் கூட இதைப் பற்றி பேசியது இல்லை என கூறியுள்ளார்.

மாஸ்டர் தயாரிப்பாளரான பிரிட்டோ இவ்வாறு கூறியதால் விஜய் மகன் ஹீரோவாவதை விட இயக்குனராகவே அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.