Petta Vijay Sethupathi Gettup

Vijay Sethupathy Petta Gettup : பேட்ட படத்தின் விஜய் சேதுபதி கெட்டப் இணையத்தில் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சனந்த் ஷெட்டி, சரத்குமார், சிம்ரன், திரிஷா மற்றும் பலர் நடித்துள்ள படம் பேட்ட.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று பெற்ற படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் மரண மாஸ் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இதனையடுத்து தற்போது விஜய் சேதுபதியின் கெட்டப் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. மேலும் இப்படம் திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாகும் எனவும் அந்த போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதியின் பெயல் ஜித்து எனவும் குறிப்பிட்டுள்ளனர். போஸ்டர் செம மாஸ் என விஜய் சேதுபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.