
Writter Vijay Sethupathi : தற்போது ஆரஞ்சு மிட்டாய் படத்திற்கு பிறகு மீண்டும் வசனம் எழுத உள்ளார்.
தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக, மக்கள் செல்வனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் விரைவில் சீதக்காதி படம் திரைக்கு வரவுள்ளது.
சீதக்காதி, இடம் பொருள் ஏவல், யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் படம் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து கொண்டே உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்திலும் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் தற்போது இளம் நடிகர்களில் ஒருவரான விக்ராந்த் நடிக்க உள்ள படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தை இயக்குனர் சஞ்சீவ் இயக்க உள்ளார்.
.@VijaySethuOffl is penning dialogues for @vikranth_offl ‘s next which will be directed by @maildirsanjeev #VijaySethupathi also wrote dialogues for his own film #OrangeMittai #WriterVijaySethupathi @proyuvraaj @SevenSri pic.twitter.com/uK20QLBEsr
— Kalakkal Cinema (@kalakkalcinema) October 26, 2018