டயட் குறித்து விஜய் சேதுபதி பகிர்ந்து இருக்கும் சுவாரசியமான தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வனாக ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் ஃபார்ஸி வெப் தொடர்காக நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் டயட் பற்றி தனது கருத்துக்களை சுவாரசியமாக பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், சாப்பாட்டில் டயட் இருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, எப்போதுமே சுவையான உணவை மட்டுமே சாப்பிட விரும்புகிறேன். சுவையான சாப்பாட்டை சாப்பிடாவிட்டால், ஒருவரது வாழ்க்கையில் சுவை இருக்காது. குறைந்த கலோரிஸ் கொண்ட உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்பது போல் இல்லாமல் நல்ல உணவை சாப்பிட வேண்டும், விரும்பியது சாப்பிட வேண்டும் என்று அப்பேட்டியில் கூறியிருக்கிறார்.