Vijay Sethupathi in Upcoming Movie

ஐந்தாவது முறையாக விஜய் சேதுபதியை இயக்க உள்ளார் பிரபல இயக்குனர்.

Vijay Sethupathi in Upcoming Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், கெஸ்ட் ரோல் என எதுவாக இருந்தாலும் நல்ல கதாபாத்திரமாக இருந்தால் போதும் என துணிந்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக கடைசி விவசாயி, மாமனிதன் என பல திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த நிலையில் விஜய் சேதுபதி அடுத்ததாக மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னதாக விஜய் சேதுபதி மற்றும் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. தற்போது மீண்டும் இவர்களது கூட்டணியில் ஐந்தாவது முறையாக புதிய படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.