திண்டுக்கல் லியோனி மகன் நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

Vijay Sethupathi in Azagiya Kanne : பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”. இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார்.

லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். பிரபு சாலமன் மற்றும் மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுத, N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார். காடன் திரைப்பட ஒளிப்பதிவாளர் A.R.அசோக் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பினை பிரபல படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மாணவர் சங்கத் தமிழன் கவனிக்கிறார். நடன இயக்குநராக ராதிகா மாஸ்டரும், படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை இளையராஜா செல்வம் அவர்களும் கவனிக்கிறார்கள்.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இத்திரைப்படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார் .தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது .

ஏற்கனவே பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் விஜய் சேதுபதி இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பதை பார்த்த ரசிகர்கள் எப்படி இவரால் மட்டும் இவ்வளவு படங்களில் நடிக்க முடிகிறது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.