Vijay Sethupathi
Vijay Sethupathi

Vijay Sethupathi :

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன்.

கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

அய்யோ… இது என்ன கொடுமை ஜீவாவுக்கு ஜோடி இவரா? – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்.!

தமிழ் சினிமாவின் பிஸி நடிகரான ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட  படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியதாக நாம் சொல்லியிருந்தோம்.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு சின்ன கேமியோ ரோலில் நடித்திருப்பதாக ஒரு செய்தி வெளியாகி வைரலானது.

ஆனால் விஜய் சேதுபதி தரப்பில் விசாரித்தால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

மேலும் இப்படத்திற்காக தனுஷ் தொடர்ச்சியாக நாற்பது நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம்.

இதில் தனுஷ் தாடி வைத்து வித்தியாசமான ஒரு கெட்டப்பில் நடித்து வருகிறார். அதனால் மற்ற படங்களில் நடிப்பதற்கு முன் இப்படத்தை ஒரேடியாக முடிக்க இப்படியொரு பிளானை தனுஷ் போட்டுள்ளாராம்.