Vijay Real Hero
Vijay Real Hero

Vijay Real Hero– அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை சுற்றுப்புற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறுவதாகதான் இருந்ததாம்.

ஆனால் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படப்பிடிப்புகள் வெளிமாநிலத்தில் நடைபெறுவதால் இங்கிருக்கும் தொழிலாளர்களுக்கு வருமானம் கிடைப்பதில்லை என்றும் அதனால் ஃபெப்சி தொழிலாளர்கள்.

இதுதொடர்பாக விஜய்யிடம் கோரிக்கை வைத்ததாகவும் அவர்களது கோரிக்கையை தற்போது விஜய் நிறைவேற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஹைதராபாத்தில் படமாக்கப்பட இருந்த காட்சிகளை தற்போது வட சென்னை போன்ற அரங்கத்தை திரைப்பட நகரில் உருவாக்கி அதில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

மேலும் தீபாவளியில் திரைக்கு வருவதால் ஜூலையிலேயே இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.