தளபதி விஜய் உடன் இணைய உள்ளார் இயக்குனர் அட்லீ.

Vijay Salary for Thalapathy 68 Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் வாரிசு.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடித்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தில் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருவதைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல் பரவி வருகிறது.

இந்த சமயத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பு உள்ள இந்த படத்திற்காக விஜய் மற்றும் அட்லி என இருவருக்கும் சேர்த்து 200 கோடி ரூபாய் சம்பளம் தர முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த 200 கோடி ரூபாயில் 75% சம்பளம் விஜய்க்கும் 25% சம்பளம் அட்லிக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.