வரலாற்று கதையில் நடிக்க தளபதி விஜய் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Vijay in Historical Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு தமிழ் என இரண்டு மொழியிலும் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். தில் ராஜூ தயாரிப்பு இந்த படத்தினை தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார்.

வரலாற்று கதையில் நடிக்க போகும் விஜய்.. படத்தின் இயக்குனர் யார்?? எதிர்பாராத ட்விஸ்ட்டோடு வெளியான அடுத்த பட தகவல்.!!

திருவண்ணாமலை : இன்று பௌர்ணமி- கிரிவலம் செல்வது எப்போது?

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் புதிய படம் பற்றிய ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அதாவது தளபதி விஜய் வரலாற்று படத்தில் நடிக்க முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகரும் இயக்குனருமான ஒருவர் தான் இயக்க இருப்பதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இந்த இயக்குனர் யார் என்பது குறித்த முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை. இதனால் அந்த இயக்குனர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Director Siva about Thala Ajith | #Annaatthe#Valimai

விஜய் வரலாற்று திரைப்படத்தில் நடித்தால் அது எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்ற விவாதமும் ரசிகர்கள் மத்தியில் எழ தொடங்கியுள்ளது.