வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியான நிலையில் தளபதி விஜய் பைக் ஸ்டன்ட் வீடியோவை வெளியிட்டு அஜித் ரசிகர்கள் கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

Vijay in Bike Stunt Video Trolls : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து கிளிம்ஸ் வீடியோ, நாங்க வேற மாதிரி மற்றும் அம்மா பாடல் என இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை இந்த படத்தின் மேக்கிங் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அஜித்தின் பைக் ஸ்டன்ட் காட்சிகள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

கோலி, ஆபத்தானவராக மாறுவார் : காம்பீர் கருத்து

இப்படியான நிலையில் அஜித் ரசிகர்கள் விஜய் ஒரு படத்தில் பைக் ஸ்டன்ட் காட்சியில் ஈடுபட்ட வீடியோவை வெளியிட்டு அதனை கலாய்த்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களை இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பிரச்சனை வெடித்துள்ளது. ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கும். அஜித்துக்கு ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது அசால்ட் என்றால் விஜய்க்கு நடனமாடுவது கை வந்த கலை, அது அஜித் அவர்களுக்கு வராது.. இதனால் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கலாய்த்து கொள்வது தேவையில்லாத ஒரு விஷயம் என பொதுவான சினிமா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Allu Arjun-னை பார்க்கவே கொஞ்சம் பயமா இருக்கு – Pushpa Press Meet | Siruthai Siva, RB Choudary, Karky

https://twitter.com/AjithThangam20/status/1470760007251546114?s=20