Vijay Fans Happy  : Karthi | Thalapathy 63 | Vijay | Thalapathy 64 | Lokesh Kanagaraj | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

Vijay Fans Happy  :

கைதி டீசரால் அதிக உற்சாகத்தில் இருப்பது விஜய் ரசிகர்கள்தான். காரணம் விஜய்யின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த கார்த்தியின் கேரியரில் தேவ் ஒரு சின்ன சறுக்கலை சந்தித்தது.

நேசமணிக்கு ஆபரேஷன் செய்யும் ஆரவ், பாத்துப்பா முத்தம் கொடுத்துடாத – வைரல் ட்வீட்.!

அதன் பின் சுதாரித்துக் கொண்ட கார்த்தி, தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேடிப் பிடித்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி பெரிதளவில் பேசப்பட்டது. இதைதொடர்ந்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.

மிகவும் விறுவிறுப்பாக அதேசமயம் ஸ்டைலாக உருவாகியிருந்த டீசருக்கு மக்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.

YouTube video

இதில் அதிக உற்சாகத்தில் இருப்பது விஜய் ரசிகர்கள்தான். காரணம் விஜய்யின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கைதி படம் குறுகிய கால படமாக உருவாகியுள்ளது. படம் முழுக்க சிறைக்குள் நடக்கும் கதை என்பதால் சீக்கிரம் முடித்துவிட்டார்களாம். மேலும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியே கிடையாதாம்.

படப்பிடிப்பு முடிந்ததால் படம் ஜூலையில் வெளியாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.