ராதிகாவின் கர்ப்பம் குறித்து பேசப்போன கோபி பாக்கியாவால் பல்பு வாங்கியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரூமுக்கு வந்த கோபி ராதிகா வேலை செய்வதை பார்த்து ரெஸ்ட் எடுக்காம என்ன பண்ணிட்டு இருக்க என கேட்க ஒரு சின்ன வேலை தான் முடிஞ்சிடுச்சு என்று ராதிகா சொல்கிறார். பிறகு கிளவுட் கிச்சன் வேலையெல்லாம் எப்படி போகுது என்று கேட்க கோபி சூப்பரா போகுது இப்படியே போன சீக்கிரம் இன்னொரு பிரான்ச் ஆரம்பித்து விடலாம் என்று சொல்கிறார்.
அதன் பிறகு நான் நேரா நம்ம கிச்சனுக்கு தான் போனேன். பாக்கியா என்னமோ நான் பெரிய தப்பு பண்ண மாதிரி முறைச்சிக்கிட்டே இருந்தா, நம்ப பிசினஸ்ல முன்னேற்றத்துல அவளுக்கு பொறாமை என்றெல்லாம் பேச ராதிகா பாக்யாவுக்கு நம்ம விஷயம் தெரியும் என்று சொல்ல நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டது ஊருக்கே தெரியும். அவளுக்கு தெரியாதா என்று கோபி கேட்க நான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரியும் என்று சொல்ல கோபி அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.
அதன் பிறகு அவளுக்கு எப்படி தெரியும் என்று கோபி கேட்க நான் சொல்லனும்னு சொல்லல அவங்களே கண்டுபிடிச்சுட்டு என்கிட்ட கர்ப்பமா இருக்கீங்களா என்று கேட்டாங்க என்றதும் நீ இல்லன்னு சொல்ல வேண்டியது தானே என்று கோபி சொல்ல என்னால் அப்படி மறுக்க முடியல ஆமாம்னு சொல்லிட்டேன் என்று சொல்கிறார்.
பாக்யாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சிடுச்சு அவங்க மூலமா மத்தவங்களுக்கு தெரியுறதுக்குள்ள நாமளே சொல்லணும். மறைந்து மறைந்து மாத்திரை சாப்பிட்டுகிட்டு இருக்க முடியல கூடிய சீக்கிரம் சொல்லிடுங்க என்று ராதிகா சொல்ல கோபி கண்டிப்பா சொல்லிடலாம் என்று சொல்கிறார்.
அடுத்ததாக இனியா விமலுடன் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் சேட் செய்து கொண்டிருக்க பாக்கியா யார் அது என்று கேட்க விமல் மா நல்ல பையன் காலையிலிருந்து சாயந்திரம் வரைக்கும் ஜோக்கா சொல்லிக்கிட்டு இருக்கான் சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது என்று சொல்கிறார். அவன் நம்பர் உனக்கு எப்படி கிடைத்தது என்று கேட்க அவன் தான் மெசேஜ் பண்ணா பழனிச்சாமி அங்கிள் கிட்ட வாங்கி இருப்பான் போல என்று சொல்கிறார். அவன ஒருமுறை தான பார்த்தேன் அளவா பேசு என்று பாக்கியா அட்வைஸ் சொல்ல இனியா என்னடா இன்னும் அட்வைஸ் போடலயேனு யோசிச்சேன் சொல்லிட்ட என்று கூறுகிறார்.
நீ நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகணும் படிப்புல கவனம் செலுத்தி நான் பேச வேண்டாம் என்று தான் சொல்லல அளவா பேசு என்று சொன்னதும் நீயும் தான் பழனிச்சாமி சார் கிட்ட பேசுற என்று இனி நான் திருப்பி கேட்க நான் என்ன பார்த்ததுமா பிரண்டாகி பேசறோம் இன்று பதில் கூறுகிறார். சரி சரி பேசுனது போதும் நாளைக்கு பேசிக்க என்று போனை வாங்கி வைத்துவிட்டு படுத்து தூங்க சொல்கிறார்.
மறுநாள் காலையில் பாக்யாவும் செல்வியும் கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்க ஈஸ்வரி காபி குடித்துக் கொண்டிருக்க கையில் பால் பாக்கெட் உடன் ராதிகா கிச்சனுக்கு வருகிறார். போனில் இன்னைக்கு ஆபீஸ் வரல வீட்ல இருந்து வேலை பார்த்துட்டு என்று சொல்லிக் கொண்டிருக்க இன்னும் உனக்கு உடம்பு சரி ஆகலையா என்று ஈஸ்வரி கேட்க இப்ப பரவாயில்ல வாந்தி கொஞ்சம் கம்மியா இருக்கு போக போக நின்னுடும் என்று சொல்கிறார்.
பிறகு ஈஸ்வரி இருப்பதால் ராதிகா வெளியே கிளம்ப ஏன் சமைக்க தானே வந்த சமைக்கலையா என்று கேட்க இல்ல நான் அப்புறம் சமைக்கிறேன் என்று சொல்கிறார். பத்து நிமிஷத்துல முடிந்திடும் என்று பாக்கியா சொல்ல ஈஸ்வரி இருப்பதை கண்ணைக் காட்டி சொல்லிவிட்டு வெளியே செல்கிறார் ராதிகா.
வாக்கிங் சென்ற கோபி வீட்டுக்குள் நுழைய ராதிகாவை பார்த்ததும் ஆல் தி பெஸ்ட் சொல்லு அம்மாகிட்ட விஷயத்தை சொல்ல போறேன் என்று ஓவர் பில்டப்புடன் கிச்சனுக்கு வருகிறார். கிச்சனில் பாக்கியாவும் செல்வியும் இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார்.
கோபி ஈஸ்வரியை வெளியே கூப்பிட அவர் கால் வலிக்குது உடனே வர முடியாது என்று சொல்ல கோபி எப்படியாவது விஷயத்தை சொல்லி விட வேண்டும் என்று முயற்சி செய்ய பாக்யா இந்த உருளைக்கிழங்கு வேற வேகமே மாட்டுது நேரம் காலம் தெரியாம உசுர வாங்குது என டிஸ்டர்ப் செய்து கொண்டே இருக்கிறார்.
இதனால் கோபி விஷயத்தை சொல்லாம நீங்க பொறுமையா எழுந்து வெளியே வந்த அப்புறம் பேசிக்கலாம் என்று வெளியே வர ராதிகா கோபி பார்க்கும் முறைத்த கோபி அப்படியே திரும்பி மேலே வந்து விடுகிறார். மேலே வந்த ராதிகா அவர்கள் என்னமோ பண்ணிக்கிட்டு போறாங்க நீங்க விஷயத்தை சொல்ல வேண்டியது தானே இப்பவே வீட்ல இருக்காங்க யார் யார் என்னென்ன சொல்லுவாங்க பயந்துகிட்டு இருக்கேன் என்று ராதிகா சொல்கிறார். விஷயத்தை சொல்லிட்டு நாம நம்ம வீட்டுக்கு போயிடலாம். நீங்க, நான் மயூ பிறக்க போற குழந்தை எல்லாரும் ஒண்ணா சந்தோஷமா இருக்கலாம் என்று சொல்கிறார். உதவிக்கு எங்க அம்மாவும் இருப்பாங்க என்று சொல்ல கோபி நீ சொல்றதுதான் சரி சீக்கிரம் அம்மாகிட்ட விஷயத்தை சொல்லிடுறேன் என்று சொல்கிறார்.
அடுத்து ராதிகா வெளியே வந்ததும் கோபி அம்மாவிடம் எப்படி விஷயத்தை சொல்றது என்று விதவிதமாக பேசி முயற்சி செய்து பார்க்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.