விஜயாவின் வார்த்தைகளால் அதிர்ச்சி அடைந்துள்ளார் ரோகிணி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா சேர்ந்து கேக் வெட்டியதை அடுத்து ரவி கிப்ட் ஒன்றை கொண்டு வந்து கொடுக்கிறார்.

முத்துவும் மீனாவும் ஆவலோடு அதைப் பிரித்துப் பார்க்க ஸ்ருதி வீடியோ எடுக்க கோவிலில் நடந்த கல்யாண போட்டோ தான் அந்த கிப்ட் என்பது தெரிய வருகிறது. இதை பார்த்து முத்துவும் மீனாவும் சந்தோஷப்படுகின்றனர்.

அதன் பிறகு முத்து மீனாவுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் முடிஞ்சிடுச்சு இந்த ஒரு வருஷத்துல நீங்க அவங்கள எந்த அளவுக்கு புரிந்து கொண்டு இருக்கீங்க அவங்கள பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு பேசணும் என்று டாஸ்க் சொல்கிறார். அதை வீடியோவை எடுத்துக் கொள்கிறேன் என்று வீடியோவை ஆன் செய்கிறார்.

அதன் பிறகு ரவி முதல்ல யார்கிட்ட இருந்து ஆரம்பிக்கலாம் என்று யோசித்து மனோஜை பேச சொல்கிறார். மனோஜ் ரொம்ப நேரம் யோசிச்சு பிறகு இவங்க ரெண்டு பேரும் எனக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும். என்னால் தானே இவங்களுக்கு கல்யாணம் நடந்துச்சு. நான் இல்லன்னா இவனுக்கு கல்யாணமே நடந்து இருக்காது. வேலை இல்லாம குடிச்சிட்டு சுத்திட்டு இருந்த இவனுக்கு யார் பொண்ணு தருவாங்க என்று பேச அதைப் பார்த்து ரோகிணியும் விஜயாவும் சிரித்து சந்தோஷப்படுகின்றனர்.

அதன் பிறகு ரோகிணியை பேச சொல்கின்றனர். ரோகிணி ஒரு புருஷனை திருத்தி மாத்தும் பவர் பொண்டாட்டி கிட்ட தான் இருக்கு. இது ஒரு வருஷமா முத்துவ மாத்த மீனா முயற்சி பண்ணி இருக்கலாம் அடுத்த வருஷம் ஆகுது முத்து மாறனும்னு நினைக்கிறேன் என்று சொல்கிறார்.

அதன் பிறகு சுருதி பேச தொடங்க எனக்கு இந்த வீட்ல சப்போர்ட் மீனா தான் மீனா இல்லனா எங்க கல்யாணம் நடந்து இருக்குமானு கூட தெரியல. ஆனா முத்து மாதிரி ஒருவரோடு லைட்டை ஷேர் பண்ணிட்டு போறது ரொம்ப கஷ்டம்.. மீனா ஸ்டார்ங் லேடி அதனால தான் அவங்களால ஒரு வருஷத்தை கடக்க முடிந்தது என்று பேசுகிறார்.

இதைத்தொடர்ந்து ரவியை பார்த்து சொல்ல ரவி முத்துவின் பர்ஃபெக்ட் ஜோடி என பேசுகிறார். நான் பொறந்ததுல இருந்து பார்த்த முத்துவுக்கும் கடந்த ஒரு வருஷமா பார்த்து முத்துவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அதுக்கு காரணம் அண்ணி தான் என்று சொல்கிறார். மேட் ஃபார் ஈச் அதர் என்று சொன்ன அப்படின்னா என்று முத்து குழப்பமாக சிரித்தால் ஒருத்தர் ஒருத்தரும் உங்களுக்காகவே பிறந்த மாதிரி என்று சொல்ல முத்து சந்தோஷப்படுகிறார்.

அதன் பிறகு அண்ணாமலையை பேச சொல்கின்றனர். அண்ணாமலை இவர்களுக்கு கல்யாணம் ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையில் தான் நடந்துச்சு உங்க வாழ்க்கை எப்படி இருக்க போகுது பயந்துட்டு இருந்தேன் ஆனால் இரண்டு பேரும் ரொம்ப நல்லா ஒருத்தர் புரிஞ்சிட்டு சந்தோஷமா வாழறாங்க இதே மாதிரி எப்பவும் இருக்கணும் என வாழ்த்துகிறார்.

அதைத்தொடர்ந்து வித்யாவை பேச சொல்ல விஜய்யா இவங்களை பத்தி பேசறதுக்கு என்ன இருக்கு ஜாருக்கு ஏத்த மூடி மாதிரிதான். அவன் முழம் பேசுணா இவ ஜான் பேசுவா. இவ கல்யாணம் ஆகி இந்த வீட்டுக்கு வர வரைக்கும் இந்த தெருவுல இந்த வீட்ட பத்தி தெரியவே தெரியாது இவ வந்த பிறகுதான் வாரத்துக்கு ஒரு பிரச்சனை, தெரு முழுக்க அதுதான் பொழுதுபோக்கு என சொல்கிறார். அப்புறம் பூக்கடை ஒன்னு வச்சு இந்த ஏரியா புல்லா பேமஸ் ஆயிட்டா.

எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதையெல்லாம் எதிர்த்து நிற்கதானே செய்யறா என தன்னை மீறி மீனாவை பற்றி பெருமையாக பேசுகிறார். ஸ்கூல் பசங்க மாதிரி சண்டை போட்டுப்பாங்க கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் காந்தம் மாதிரி ஒட்டிப்பாங்க என்று சொல்ல அதை பார்த்து ரோகினி அதிர்ச்சி அடைகிறார்.

அடுத்ததாக முத்துவை பேச சொல்ல முத்து ஆரம்பத்துல எனக்கு மீனாவிற்கும் செட் ஆகல‌. போகப் போக அது அப்படியே மாறுச்சு. இந்த வீட்டில நான் எப்பவும் ஒரு பொருளா தான் இருந்திருக்கும் நானும் ஒரு மனுஷன் தானே அடிக்கடி எங்க அப்பா சொல்லித்தான் எனக்கு தெரியும். மீனா வந்த பிறகு அது இன்னும் மாற ஆரம்பிக்கும் போது என்னையே எனக்கு பிடிச்சது என்று பேசி சந்தோஷத்துடன் வெட்கப்படுகிறார். ஜல்லிக்கட்டுல அடங்காத காளை ஒருத்தருக்கு மட்டும் அடங்கும் அந்த மாதிரி தான் என்னையும் மீனா மாத்திட்டா என சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து மீனாவை பேச சொல்ல மீனா எனக்கும் ஆரம்பத்துல என் வாழ்க்கையை நினைத்து பயம் இருந்தது. ஆனால் என் அம்மாவும் மாமாவும் சேர்ந்து எனக்கு நல்ல வாழ்க்கையை தான் அமைச்சு கொடுத்து இருக்காங்க என்று சொல்கிறார். இவருக்கு இந்த கோபம் பாதியிலிருந்து தான் வந்திருக்கு அதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கு என்று மீனா பேச ஆரம்பிக்க மனோஜ், முத்து, விஜயா மற்றும் அண்ணாமலையின் முகம் மாறுகிறது. அதுக்கான காரணம் என்னன்னு இதுவரைக்கும் அவர் என்கிட்ட சொன்னதே கிடையாது, என்னை அவர் முழு மனைவியா ஏற்றுக்கலயா என்று தெரியவில்லை. நீ முக்கா பொண்டாட்டியாவே இரு என்று முத்து எல்லாரும் பேசினது எப்போதும் என்று ஆட்டத்தை கலைக்க இன்னும் அத்தை பேசல என்று மீனாவின் அம்மாவின் பேச சொல்ல அவர் பேச எழுந்துக்க சத்யா வீட்டு வாசலில் வந்து நிற்க அதை பார்த்த முத்து கோபப்படுகிறார். மீனா முத்துவின் கையை பிடித்து நிறுத்துகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.