ஞானம் சொன்ன வார்த்தையால் குணசேகரன் பக்கம் காற்று வீச தொடங்கியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல்.
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் நானும் கொஞ்சம் சும்மா இருங்க மனுஷனை அவன் போக்கில் போக விடுங்க என்று சொல்ல குணசேகரன் நேத்து சவால் விட்டாங்க இன்னிக்கி அவங்களுக்குள்ளயே மோதிக்கிட்டு இருக்காங்க என்று சந்தோஷப்படுகிறார்.
அதன் பிறகு நந்தினியின் அப்பா இந்த முறை மொய் விருந்து வச்சு காது குத்திடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் என்று சொல்ல பணம் இல்ல அதுக்காக வசூல் வேட்டைக்கு தயாராகிட்டீங்க அதை நேரா சொல்லிட்டு போக வேண்டியது தானே என்று அவமானப்படுத்துகிறார்.
இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் மண்டபத்துல பேசினதெல்லாம் என்ன ஆச்சு? பொம்பளைங்க வீட்டை விட்டு வெளியே போற வரை எந்த முன்னேற்றமும் இருக்காது என விமர்சனம் செய்து வருகின்றனர்.