முத்து கிடுக்குப்பிடி போட மனோஜ் திணற ரோகிணிக்கு ஷாக் கொடுத்துள்ளார் மீனா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் என் பேர்ல இப்போ 15 லட்சம் ரூபா பணம் வந்திருக்கு என்று திரும்பத் திரும்ப சொல்ல முத்து உன் பேர்ல பணம் வந்து இருக்கா என்று கேட்டு ஷாக் கொடுக்கிறார்.
பிறகு அண்ணாமலையிடம் அப்பா நீ எனக்கு பணம் கொடுக்கிறேனா யார்கிட்ட தருவ என்று கேட்க உன் கிட்ட தான் தருவேன் என்று அண்ணாமலை சொல்ல அதே கேள்வியை மீனாவிடம் கேட்ட எங்கம்மா என்கிட்ட தான் தருவாங்க என்று சொல்கிறார். அடுத்ததாக ஸ்ருதியிடம் கேட்க அவரும் என்கிட்ட தான் தருவாங்க என்று சொல்கிறார். அப்படி இருக்கும்போது ரோகிணியோட அப்பா ரோகினிக்கு பணத்தை அனுப்பாமல் எதுக்கு உனக்கு அனுப்புனாரு என்று மடக்கி பிடிக்கிறார்.
அதைத்தொடர்ந்து விஜயா மனோஜ் உன் பெயர்லயா பணம் வந்தது என்று கேட்க அவரும் ஆமாம் என்று தடுமாற ரோகிணி அவர்தான் பிசினஸ் ஆரம்பிக்க போறாரு அதனால பின்னாடி ஐடி பிரச்சனை எதுவும் வரக்கூடாது என்பதற்காக நான் தான் மனோஜ் பேர்ல அனுப்ப சொன்னேன் என்று சமாளிக்கிறார். உடனே விஜயா நீ செஞ்சா சரியா தான் இருக்கும் அவன் பொறாமையில பேசுறான் என்று சொல்கிறார்.
அதன் பிறகு ரூமுக்கு வந்த ரோகினி மனோஜை பிடித்து அடித்து திட்டுகிறார். உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா என்று கேட்கிறார். இனிமே இந்த பணத்தை பத்தி நீ பேசவே கூடாது என்று கண்டிஷன் போடுகிறார். முதல்ல இந்த முத்துவோட பேச்சுக்கு ஒரு புல் ஸ்டாப் வைக்கணும் என்று சொல்ல மனோஜ் அதுக்கு ஸ்விட்ச் நம்ம கிட்ட இல்லையே என்று பதில் சொல்ல மீனா கிட்ட இருக்கு என்று ரோகிணி வெளியே கிளம்பி வருகிறார்.
கிச்சனில் இருக்கும் மீனாவை கூப்பிட்டு பணம் யார் பேர்ல வந்தா முத்துவுக்கு என்ன? எதுக்கு எங்களை கேள்வி கேட்கணும்? மீனா அவர் எப்பவும் போல தானே கேட்டாரு என்று பதில் சொல்ல எங்க பர்சனல்ல அவர் எதுக்கு தலையிடணும் உங்க விஷயத்துல நாங்க தலையிடுறோமா என்று கேட்கிறார்.
அன்னைக்கு அவருக்கு நான் கார் வாங்கி கொடுத்த போது இதே இடத்தில் வெச்சு தான் பணம் எப்படி வந்தது என கேள்வி மேல கேள்வி கேட்டீங்க நீங்க கேட்டா சரி அவர் கேட்டால் தப்பா என்று மீனா பதிலடி கொடுக்க ரோகிணி இனிமே உங்கள எதுவும் கேட்க மாட்டோம் நீங்களும் கேட்காதீங்க என்று சொல்கிறார்.முத்து கிட்ட சொல்லி வையுங்க என்று சொன்னதும் மீனா அதை நீங்களே சொல்லுங்க என்று மீண்டும் பதிலடி கொடுக்க நான் சொல்லி வீட்ல பிரச்சனை வேணாம்னு பாக்குறேன் எல்லாரும் சண்டை போடணுமான்னு யோசிச்சு பாருங்க என்று சொல்லி கிளம்பி வருகிறார்.
அதன் பிறகு மீனா முத்துவை பிடித்து அவர்கள் விஷயத்துல நீங்க எதுக்கு தலையிடுறீங்க என்று திட்டுகிறார். தப்புன்னு தெரிஞ்சா தைரியமா கேள்வி கேட்கணும் என பாட்டி சொல்லி இருக்காங்க என்று முத்து சொல்ல அதே பாட்டி தான் வீட்ல சண்டை சச்சரவு இல்லாம ஒண்ணா இருக்கணும்னு சொல்லி இருக்காங்க என்று மீனா பதில் சொல்கிறார். முத்து அந்த பார்லர் அம்மா ஏதாச்சு சொல்லுச்சா என்று கோபப்பட்டு உள்ளே செல்ல மீனா அவரை பிடித்து ஒழுங்கா வேலைக்கு கிளம்புங்க என்று அனுப்பி வைக்கிறார்.
அதன் பிறகு ரோகிணி வித்யாவிடம் நடந்த விஷயங்களை சொல்லிக் கொண்டு நடந்து வர எதிரே வந்த மேனேஜர் நான் அன்னைக்கு உன்கிட்ட பணம் கேட்டேன் நீ இன்னும் தரல இன்னும் ஒரே நாள்தான் டைம், நீ பணம் தரவில்லை என்றால் நேரா உன் வீட்டுக்கு வந்து எல்லா உண்மையை சொல்லிடுவேன் என்று மிரட்ட மனோஜிடம் இருக்கும் பணத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாயை வாங்கி கொடுத்து பிரச்சினையை சமாளிக்க முடிவெடுக்கிறார்.
ரோகிணி வீட்டுக்கு வர மனோஜ் படுத்துக்கொண்டு பணக்கார லிஸ்டை பார்த்து எப்படி பணக்காரங்க ஆனாங்க என்ன பிசினஸ் பண்ணாங்கன்னு கேட்டுகிட்டு இருக்கிறதா சொல்ல மத்தவங்க பண்ணத பண்ணக்கூடாது நாம சுயமா யோசிச்சு ஏதாவது பண்ணனும் என்று ரோகிணி திட்டுகிறார்.
பார்க் பிரண்டு வட்டிக்கு விட சொன்னாரு என்று மனோஜ் சொல்ல அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று சொல்லும் ரோகிணி இப்போதைக்கு மனோஜிடமிருந்து பணத்தை வாங்க இது ஒன்றுதான் சரியான ஐடியா என்று யோசித்து எனக்கு ஒரு லட்ச ரூபாய் கடனா கொடு என்று கேட்டு 2000 வட்டியை அனுப்பி ஒரு லட்சத்தை வாங்கிக் கொள்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.