விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமணம்; உதய்பூரில் ஏற்பாடு..

Web Ads

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் நடைபெறவுள்ள திருமண நிகழ்வு பற்றிய தகவல்கள் காண்போம்..

‘கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் முதல் முறையாக இணைந்து நடித்தனர். இப்படம் ஹிட் வரிசையில் இணைந்தது. இதன் பின்னர் ‘டியர் காம்ரேட்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக தகவல் வெளியானது.

அவ்வப்போது வெளிநாடுகளுக்கு இவர்கள் சுற்றுலா சென்று வருவதும் வழக்கம். இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் ஹைதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டா வீட்டில் நடைபெற்றது. இதில், இருவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் மட்டுமே கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடைபெறும் என முடிவு செய்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், உதய்பூர் நகரில் இவர்களின் திருமணம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு தகுந்த வகையில் ராஷ்மிகா, உதய்பூரில் நட்சத்திர விடுதிகள் சிலவற்றை பார்வையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தங்கள் திருமணத்தை மிக பிரம்மாண்டமாக இருவரும் திட்டமிட்டு வருவது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

vijay deverakonda rashmika mandanna married in next year
vijay deverakonda rashmika mandanna married in next year