விஜய் ஆண்டனி தனது உடல் நலம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவின் மூலம் தெரிவித்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தற்போது முன்னணி ஹீரோவாகவும் வளம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டில் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் இப்படத்தில் இரண்டாம் பாகத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் ஆண்டனியே இயக்கி நடித்து வருகிறார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் மலேசியா மற்றும் லங்காவி தீவில் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் பைக் போட்டை ஓட்டும் போது விஜய் ஆண்டனி அவர்களுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் அவருக்கு முகம் மற்றும் உடம்பில் பலமான காயங்கள் ஏற்பட்டு பற்கள் உடைந்து சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார். அவரை பட குழுவினர் லங்காவியல் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர்.

அதன் பிறகு தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜய் ஆண்டனி தற்போது உடல் நலம் தேறியுள்ளதாக தனது புகைப்படத்துடன் ட்விட்டர் பக்கத்தில் பதிவின் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார். அதில் அவர், அன்பு நண்பர்களே, மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்தில் இருந்து நான் பாதுகாப்பாக மீட்கப்பட்டேன். நான் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை முடித்தேன். கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன் எனது ஆரோக்கியத்திற்கான உங்கள் ஆதரவுக்கும் அக்கறைக்கும் நன்றி என குறிப்பிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.