Vijay and Sriman
Vijay and Sriman

இளைய தளபதி விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர். திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

தனது தந்தையின் கரம் பற்றி திரை துறையில் காலடி எடுத்து வைத்தாலும், அதன்பின் தனக்கான பாதையை தனது விடாமுயற்சியால், தானே அலங்கரித்து இன்று ஆளப்போறான் தமிழன் என எல்லைகளை கடந்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் வெகு சிலருக்குதான் பிரபலங்களே ரசிகர்களாக இருப்பார்கள். அதில் விஜய்யும் ஒருவர். இவரை நேசிக்கும் பிரபலங்களில் முக்கியமானவர் ஸ்ரீமன். இவரும் விஜய்யும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் விஜய்யுடனான தனது நட்பு குறித்து அண்மையில் பேசிய ஸ்ரீமன், “விஜய்க்கு என்னை ரொம்ப பிடிக்கும். எங்களுக்குள் இருக்கும் நிஜ நட்புதான் திரையில் பிரதிபலிக்கிறது.

என் கேரியரில் எப்போது எல்லாம் பின்னடைவு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் எனக்கு ஒரு படம் கொடுத்து என்னை கேரியரில் நிலைநாட்டுவார் விஜய்” என்றார்.

பைரவாவை தொடர்ந்து ஸ்ரீமனின் கேரியர் தற்போது மீண்டும் ஹை ஸ்பீடில் சென்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Vijay and Sriman
Vijay and Sriman