‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட ரிலீஸ் அறிவிப்பு: ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

விக்கி-பிரதீப் கூட்டணியில் உருவான படத்தின் அப்டேட்ஸ் காண்போம்..

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் சீமான் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். இப்படத்தை நயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ மற்றும் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார்.

மேலும் எஸ்.ஜே. சூர்யா, கெளரி கிஷான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதலில் சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து இப்படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். லைகா நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால், அப்படம் ஷூட்டிங் தொடங்கும் முன்னரே கைவிடப்பட்டது. இதையடுத்து, சிவகார்த்திகேயனுக்கு பதிலாக பிரதீப் இணைந்தார்.

படத்தில் பிரதீப்பும் அவரது தந்தையாக நடிக்கும் சீமானும் ஒரே பெண்ணை காதலிப்பதுதான் கதைச்சுருக்கம். டைம் டிராவல் கதையம்சம் கொண்ட இப்படம் வருகிற செப்டம்பர் 18-ந்தேதி ரிலீஸ் என படக்குழு அறிவித்துள்ளது.

லவ்டுடே, டிராகன் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின்னர் பிரதீப் நடிப்பில் வெளியாக உள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவ்வகையில், இப்படம் ஹாட்ரிக் வெற்றியை பெறுமா? என இயக்குனர் விக்கிபோல பொறுத்திருந்து பார்ப்போம்.!

vignesh sivan lik to release date september 18
vignesh sivan lik to release date september 18