வேற்றுக் கிரகவாசிகளுடன் அல்லு அர்ஜுன்: 800 கோடி பட்ஜெட்டில் அட்லீ இயக்கும் படம்..

இந்திய சினிமாவில், முதல்முறையாக வேற்றுக்கிரகம் பற்றிய பிரம்மாண்ட திரைப்படம் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் அறிவிப்பு வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை இணை பிரபஞ்சம் (Parallel Universe) என்ற கான்செப்ட்டில் அட்லீ உருவாக்கவ உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில், அல்லு புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார். ஜூன் மாதம் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கும். அல்லு அர்ஜுன் இந்த படத்திற்கான பயிற்சிப் பட்டறையிலும் கலந்துகொள்கிறார். ஒத்திகை படப்பிடிப்பும் நடைபெறும்.

800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பதால் அட்லீ அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். அதனால்தான் படப்பிடிப்புக்கு முன்பாகவே பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படவுள்ளன.

செப்டம்பர் மாதம் முதல் படத்தின் வழக்கமான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா 2 படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படமும், ‘ஜவான்’ படத்திற்கு பிறகு அட்லீ இயக்கும் படமும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இணை பிரபஞ்சம், வேற்றுகிரகவாசிகள் போன்ற கான்செப்ட்களில் இதுவரை ஹாலிவுட் படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. ஆனால் அட்லீ, அல்லு அர்ஜுன் கூட்டணி முதன்முறையாக ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை உருவாக்கவுள்ளது என்பதால் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இணை பிரபஞ்சத்தில் அல்லு அர்ஜுன் ஒரு ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில், நீருக்கு அடியில் நடைபெறும் சண்டைக்காட்சிகள் முக்கிய ஈர்ப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

படத்தில் ஜான்வி கபூர், மிருணாள் தாக்கூர் கமிட்டாகலாம் என கூறப்படுகிறது. தற்போது அல்லு அர்ஜுன் தனது தோற்றத்தை மாற்றிக்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

allu arjun and atlee pan india film shooting update
allu arjun and atlee pan india film shooting update