இயக்குனர் லோகேஷ் ஆர்வம்: தளபதி விஜய் சம்மதிப்பாரா?
லோகேஷ்-விஜய் கூட்டணி மீண்டும் உருவாக வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். இது பற்றி தற்போது வைரலாகும் தகவல்கள் காண்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் ‘கூலி’ முடித்ததும் ‘கைதி 2’ படத்தை இயக்குகிறார். பின்னர், கமல் நடிப்பில் ‘விக்ரம் 2’ படத்தை தொடங்குகிறார். சூர்யா நடிப்பில் ‘ரோலெக்ஸ்’ படமும் உள்ளது.
இது தொடர்பாக லோகேஷ் மேலும் தெரிவிக்கையில், தளபதி விஜய் நடிப்பில் ‘லியோ 2’ படத்தை இயக்க விரும்புகிறேன். விஜய்க்காக இரண்டு படங்கள் இருக்கிறது. ரசிகர்கள் உள்பட அனைவரும் ‘லியோ 2’ படத்துக்கு ஆர்வம் காட்டி வந்தாலும், ‘மாஸ்டர் 2’ படத்தை எடுக்க விரும்புகிறேன். இதற்கான ஐடியாவும் இருக்கிறது. விஜய்க்கும் அந்த ஐடியா பிடித்திருக்கிறது. ஆனால், விஜய்யின் அரசியல் என்ரியால் தற்போதைக்கு சாத்தியமில்லை. இருந்தாலும், என்னுடைய யூனிவர்ஸில் ‘லியோ’ ரெபரன்ஸ் நிச்சயம் இருக்கும்.
‘லியோ’ படத்தின் பிளாஷ்பேக் காட்சிக்கு வந்த விமர்சனம் என்னை மிகவும் பாதித்ததாக நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை, அதை நான் ஒரு விழிப்புணர்வாகவே பார்க்கிறேன். அந்த 20 நிமிட பிளாஷ்பேக் காட்சி ஒரு பின்னடைவுதான். ஆனால், அது படத்தின் பிசினஸை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
இனிவரும் படங்களில் இதுபோன்ற தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும் என்கிற பாடத்தை அப்படம் கற்றுக் கொடுத்துள்ளது’ எனவும் தெரிவித்துள்ளார் லோகேஷ். அப்ப, லியோ-2 படமும் மாஸ்டர்-2 படமும் வெயிட்டிங்கா?
