இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டா ஸ்டோரியில் அஜித் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் தல அஜித் நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படத்தை இயக்கவிருந்தார். ஆனால் இவரது கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காமல் போனதால் இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகி விட்டார்.

அதனை அவரே தனது ட்விட்டர் பயோவில் இருந்து ஏகே 62 பெயரை நீக்கி உறுதிப்படுத்தி இருந்தார். ஆனாலும் விக்னேஷ் சிவன் அஜித் மீதுள்ள அன்பை அவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது இன்ஸ்டால் ஸ்டோரியில் பதிவிட்டு வெளிப்படுத்தி இருக்கிறார். இதனைக் கண்ட அஜித் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் அப்புகைப்படத்துடன் இருக்கும் பதிவை வைரலாக்கி வருகின்றனர்.