Vignesh Shivan Expectations With Nayanthara
Vignesh Shivan Expectations With Nayanthara

அன்னையர் தினத்தில் நயன்தாரா கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இதே குழந்தை போல் தங்களுக்கும் பிறக்க வேண்டும் என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

Vignesh Shivan Expectations With Nayanthara : தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு மலர்ந்த இவர்களின் காதல் இன்று வரை தொடர்ந்து கொண்டே வருகிறது.

சகோதரருடன் ஜாலியாக நேரத்தை செலவிடும் ரகுல் ப்ரீத்தி சிங் – இணையத்தை கலக்கும் புகைப்படம்.!

விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எப்போதும் சமூக வலைதளங்களில் நயன்தாராவை பற்றி பேசிவரும் விக்னேஷ் சிவன் அன்னையர் தினத்திலும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எங்களுக்கும் வரும் காலத்தில் இப்படி ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்பதுதான் ஆசை என கூறியுள்ளார்.

வெள்ளைக்கார குழந்தையை கையில் வைத்துள்ளார் நயன்தாரா. இதனை பார்த்த ரசிகர்கள் அது எப்படி முடியும் என கேட்கின்றனர்.

மேலும் கேப்க்ஷன் எல்லாம் பிண்றீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர். சிங்கிள்ஸ் வழக்கம்போல சாபம் விட்டு வருகின்றனர்.