விஜய் மற்றும் தோனி சந்திப்பு குறித்து விக்னேஷ் சிவன் வயிறு எரியுது என சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

Vignesh Shivan Comment on Vijay and Dhoni Meeting : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திலே நெல்சன் திலிப் குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

விஜய், தோனி சந்திப்பு.. வயிறு எரியுது.. இணையத்தில் தீயாக பரவும் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பதிவு.!!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இதே ஸ்டூடியோவில் தல தோனி விளம்பர ஷூட் ஒன்றில் நடிப்பதற்காக சென்னை வந்திருந்தார். அப்போது அவர் தளபதி விஜய்யை சந்தித்து பேசினார்.

ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷூக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகை : அரசு ஒப்புதல்..

நெல்சன், விஜய் மற்றும் தோனி ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவின. இந்த புகைப்படத்தை பார்த்த விக்னேஷ் சிவன் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். என் வயிறு 274 டிகிரி செல்சியஸில் எரியுது. ரா போட்டோஸையாவது அனுப்பி வையுங்கள் நெல்சன். எடிட் செய்தாவது ஆறுதல் தேடிக்கிறேன் என நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார். இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

சென்னை சூளைமேட்டை கலக்கும் ஜம் ஜம் பிரியானி | Muslim Style Biriyani | Food Review Tamil