தனுஷ் என்னை கலாய்க்கவே இல்லை: நடிகை வித்யுலேகா கூறிய ஃப்ளாஷ்பேக்..
‘குண்டான உடல்வாகுடன் இருந்தாலும் தனுஷ் என்னை கலாய்க்கவில்லை’ என நினைவுகூர்ந்துள்ளார் வித்யுலேகா. இது குறித்த சுவாரஸ்யம் பார்ப்போம்..
நடிகர் மோகன் ராமனின் மகள் வித்யுலேகா ‘நீ தானே என் பொன்வசந்தம்’ படம் மூலம் நடிகையானவர். நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். தெலுங்கு படங்களில் அதிகம் பிஸியாக இருக்கும் இவர், தன் எடையை 12 கிலோ குறைத்துவிட்டார். தொழில் அதிபர் சஞ்சய்யை திருமணம் செய்து கொண்ட பிறகும், நடிப்பை தொடர்கிறார்.
இந்நிலையில், அவர் தெரிவித்துள்ள விஷயம் ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது. அதாவது, படங்களில் தன் உருவத்தை வைத்து கிண்டல் செய்து காட்சி வைக்கிறார்கள். அது எனக்கு கஷ்டமாக இருந்தாலும் உள்ளே அழுதுகொண்டு வெளியே சிரித்தபடி நடிக்கிறேன் என தெரிவித்திருக்கிறார் வித்யுலேகா.
மேலும் தன் எடையை, உருவத்தை கிண்டல் செய்யாமல் படம் எடுத்தவர் இயக்குனர் தனுஷ் என கூறியிருக்கிறார். தனுஷ் இயக்கி, நடித்த ப.பாண்டி படத்தில் அவரை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வித்யுலேகா.
அவரின் பேட்டியை பார்த்துவிட்டு ப. பாண்டி படம் பார்த்தவர்களோ ஆமாம், வித்யுவின் உருவத்தை தனுஷ் கலாய்க்கவே இல்லை. நகைச்சுவை நடிகைகளின் உருவம், குரலை கிண்டல் செய்யும் நிலையில் தனுஷ் அப்படி எதுவும் செய்யவில்லை என பாராட்டுகிறார்கள். வித்யுலேகா ராமன், இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியின் தங்கை ஆவார்.
