அஜித் அண்ணா, செம ஜாலியாக பேட்டி கொடுத்தார்: வைரலாகும் சந்தானம் நினைவலைகள்..
பொதுவாக அஜித் பேட்டி கொடுப்பதில்லை. ஆனால், அவரே விரும்பி ஒரு பேட்டி கொடுத்துள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்..
‘தல’ அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. மேலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித்தை தனுஷ் இயக்குவதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதுதான் பெரும்பாலான கணிப்பாக இருக்கிறது.
இதற்கிடையே அஜித்குமார் ஊடகங்களை சந்தித்து பேட்டி கொடுப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன. அதற்கு காரணங்களாக பல்வேறு விஷயங்கள் சொல்லப்படுகிறது. இச்சூழலில், பத்மபூஷன் விருது பெற்றதன் காரணமாக, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அஜித் கடைசியாக பில்லா, அசல் பட சமயத்தில்தான் பேட்டி கொடுத்திருந்தார். அதில், ஒரு பேட்டிதான் சந்தானம் எடுத்தது.
இந்நிலையில் அந்தப் பேட்டி குறித்து, சந்தானம் நினைவுகூர்ந்திருக்கிறார். சந்தானம் தெரிவிக்கையில் ‘திடீரென ஒருநாள் அஜித் எனக்கு போன் செய்து சந்தானம் ஒரு பேட்டி எடுக்க முடியுமா? என்று கேட்டார். உடனே நான், ஓகே அண்ணா யாருக்கு? என்று கேட்டேன்.
அதற்கு அவர், ‘நான்தான் பேட்டி கொடுக்கலாம் என்று இருக்கிறேன்’ என கூறினார். எனக்கு ஆச்சரியம். பிறகு ஓகே சொல்லிவிட்டேன். அந்தப் பேட்டியில் செம ஜாலியாக பேசினார். அந்தப் பேட்டிதான் அவர் அப்படி பேசியது, முதலும் கடைசியும் என நினைக்கிறேன்’ என தெரிவித்தார். தற்போது ‘தல’ ரசிகர்களால் அந்த நேர்காணலும் வைரலாகி வருகிறது.
