ஜனநாயகன் : பிரியாமணி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
ஜனநாயகன் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் ப்ரியாமணி.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச். வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.
மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபிதியோல் ,நரேன், பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அடுத்த வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது ஜனநாயகம் படம் குறித்து தகவலை பிரியாமணி பகிர்ந்துள்ளார். அதாவது நான் விஜய் சாரின் தீவிரமான ரசிகை அவருடன் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் இந்த படத்தில் இன்னும் எனது காட்சிகள் படமாக்கப்படவில்லை விரைவில் எனது காட்சிகள் படமாக்கப்பட உள்ளது இந்தப் படத்தில் எனது கதாபாத்திரமும் முக்கியமான கதாபாத்திரம் தான் என்று கூறியுள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
