விக்கி-ராஷ்மிகா நடிப்பில், சூப்பர் ஹிட்டான ‘சாவா’ படம், ஓடிடி.யில் ரிலீஸ்
50 நாட்களை கடந்தும் வரவேற்பு பெற்று வரும் ‘சாவா’ படத்தின் ஓடிடி வெளியீடு பார்ப்போம்..
சத்ரபதி சிவாஜியின் மகனான ஷாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை பற்றி உருவான திரைப்படம் ‘சாவா’. விக்கி கௌஷல் ஹீரோவாகவும், ராஷ்மிகா கதாநாயகியாகவும் நடித்திருந்த இந்த படம், பிப்ரவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் 50 நாட்களை கடந்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சுமார் ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், முதல் நாளிலேயே வெற்றியை உறுதி செய்யும் விதமாக வசூலில் கலக்கியது. தற்போது வரை இப்படம், ரூ. 500 கோடியில் இருந்து ரூ. 800 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் எனவும் அவ்வகையில், ‘சாவா’ முதலிடத்தில் உள்ளது.
இந்த சூப்பர் ஹிட் படத்தை திரையரங்கில் பார்க்க தவறிய ரசிகர்கள் எப்போது ஓடிடியில் ரிலீஸாகும் என காத்திருந்தனர். தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளதாகவும், இதனால், அனைத்து மொழிகளிலும் ஏப்ரல் 11-ந்தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.