தனுஷ் விவகாரம்: நயன்தாரா வழக்கை தொடர்ந்து, தயாரிப்பாளர் கதிரேசன் வழக்கு
சில பிரச்சினைகளை பேசி தீர்க்கலாம். தீராத நிலையில் நீதிமன்றம் செல்ல நேரிடுகிறது. அவ்வகையில் தொடரும் தனுஷ் விவகாரம் காண்போம்..
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் கதிரேசன், மீண்டும் தனுஷை வைத்து ஒரு படம் தயாரிக்க சில ஆண்டுகளுக்கு முன்னதாக அட்வான்ஸ் தொகையாக 3 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்.
மீண்டும் வெற்றிமாறனை இயக்குநராக கொண்டு வந்தால், படத்தில் நடிக்கிறேன் என்றும் தற்போது தனது பிசினஸ் பெரிதாக மாறிவிட்டது என கதிரேசன் படத்தில் தனுஷ் நடிக்க முடியாது என தவிர்த்து வந்த நிலையில்,
தனுஷுக்கு ரெட் கார்டு போட வேண்டும் என்கிற அளவுக்கு கதிரேசன் பஞ்சாயத்தை பெரிதாக கூட்டி இட்லி கடை படத்தின் தயாரிப்பு பணிகளுக்கு கூட தடையாக மாறிவிட்டார் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.
தனுஷ் 3 கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கிய நிலையில், உங்கள் படத்தில் இப்போதைக்கு என்னால் நடிக்க முடியாது என அட்வான்ஸ் தொகையான 3 கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து 6 கோடி வரை தந்துவிடுவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அதற்கு கதிரேசன் சம்மதிக்காத நிலையில், நாசர் உள்ளிட்ட நடிகர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி 8 கோடி ரூபாய் வரை பெற்றுத் தர சம்மதித்துள்ளனர்.
ஆனால், தனக்கு 16 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் தான் இந்த பிரச்னையை தீர்க்க முடியும் என ஃபைவ் ஸ்டார் கதிரேசன் சொல்லிவிட்டாராம்.
இல்லையென்றால், தனக்கு பணமே வேண்டாம் கால்ஷீட் கொடுங்க தனுஷ் எனக் கேட்க, தனது தற்போதைய மார்க்கெட் அதிகரித்துவிட்டது என்றும் உங்கள் பேனரில் படம் பண்ண முடியாது என்றும் அப்படியே பண்ண வேண்டும் என்றால் இயக்குநர் வெற்றிமாறனை அழைத்து வாருங்கள் எனக் கூறிவிட்டார். இதனால்தான் இந்த பிரச்னை சிக்கலாக மாறியிருக்கிறது.
இதில், தனுஷ் பக்கம் சரியா? அல்லது கதிரேசன் பக்கம் சரியா? என்பதை சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.
8 கோடி ரூபாய்க்கு மேல் ஒரு பைசா கூட தரமாட்டேன் என தனுஷ் சொல்லிய நிலையில் தான் வழக்கு வரை இந்த விவகாரம் வெடித்திருப்பதாக கூறுகின்றனர். நயன்தாரா – தனுஷ் வழக்கு ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க கதிரேசன் – தனுஷ் வழக்கும் தலைவலியாக மாறியுள்ளது.
பொல்லாதவன், ஆடுகளம் என தனுஷ் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் கதிரேசனின் படத்தில் குறைந்த சம்பளத்தில் தனுஷ் நடித்து தரலாமே என்றும் அப்போது தனுஷின் சம்பளம் 8 கோடி இப்போ 35 கோடி வரை வாங்குகிறார் என இன்னொரு தரப்பும் விவாதங்களை நடத்தி வருகின்றன.