பிரம்மாண்ட திரைப்படம்; அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணியில் சமந்தா
‘ஜவான்’ படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் அப்டேட் பார்ப்போம்..
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் அடுத்த பான் இந்தியா படம் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அமேசான் தொடர்கள் மூலம் பான் இந்திய நட்சத்திரமாக அறியப்படும் சமந்தா இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பார் என கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகத்தில் சமந்தாவின் நடனம் இந்திய அளவில் வைரலானது.
இதையடுத்து, தற்போது அட்லீ – அல்லு படம் மூலம் இணைந்துள்ளார். இவர் அட்லீ இயக்கத்தில் மெர்சல், தெறி போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இப்படம் வெளியாக வாய்ப்புள்ளது.
முன்னதாக, சல்மான்கானை வைத்து படம் இயக்க அட்லீ முயற்சி செய்தார். ஆனால், அதிக பட்ஜெட் மற்றும் தேதிகள் கிடைக்காததால், இந்த படம் கைவிடப்பட்டது. இதனை சல்மான்கான் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இதேபோல் பிரியங்கா சோப்ரா கமிட் ஆக இருந்து, சமந்தா 2 ஆண்டுகளுக்கு பிறகு தரமான கம்பேக் கொடுக்க தயாராகியுள்ளார்.
தமிழ்ப் படங்களின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட் சென்ற அட்லீ, ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ ஹிட் படத்தை கொடுத்தார். அப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.