தாமதமாகவே படம் பார்த்தேன்; படக்குழுவை தரமாக பாராட்டுகிறேன்: திரிஷா பதிவு..

சசிகுமார்-சிம்ரன் கணவன்-மனைவியாக நடித்து வெளியான குடும்ப படமான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ரிலீசாகி நீண்ட காலமாகி விட்ட நிலையில், தற்போது ஓடிடி தளத்திலும் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்து வருகிறது.
இந்நிலையில், நடிகை திரிஷா இந்த படத்துக்கு பாராட்டு தெரிவித்து தனது இன்ஸ்டாவில் பதிவு பார்ப்போம்.. ‘தாமதமாக தான் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்தேன். என்ன மாதிரியான ஒரு படம். நடிப்பு. திரைக்கு உள்ளயும், வெளியவும் நல்ல மனசு கொண்டவர்களுக்கு நல்லதே நடக்கும் என்பதற்கு சசிகுமார் சார் ஒரு வாழும் உதாரணம்.
நடிகை சிம்ரன் எனக்கு பிடித்தவர். உங்களை நான் சந்தித்த நாளில் இருந்து எனக்கு இன்ஸ்பிரேஷன் நீங்கள் தான். எம்.எஸ். பாஸ்கர், குமாரவேல், பகவதி பெருமாள், கமலேஷ் ஜெகன் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளீர்கள்.
ஒரு உண்மையான, அழகான படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குனர் அபிஷன். இவ்வாறு ஒட்டுமொத்த படக்குழுவினரையும் பாராட்டி தள்ளியுள்ளார் திரிஷா. அவருடைய இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தாமதமாக பாராட்டினாலும், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை திரிஷா சிறப்பாக பாராட்டியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இப்படத்தின் கதைக்களம் என்னவென்றால், பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் ஒரு குடும்பம் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். அவர்கள் ஒரு குடியிருப்பு பகுதிக்கு குடி போகின்றனர். பின்னர், அங்கு நடக்கும் மனிதாபிமான சம்பவங்களை அடிப்படையாக வைத்து காமெடி கலந்து உணர்வுபூர்வ படைப்பாக டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை உருவாக்கி இருந்தார் அபிஷன் ஜீவிந்த். முன்னதாக, இப்படத்தை ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்திகேயன், ராஜமௌலி உள்பட பிரபலங்கள் பலரும் பாராட்டியிருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
