ஷாருக்கானின் ‘கிங்’ படத்தின் து மில் ஜாயே பாடலுக்கு முதலிடம்!

ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கிங்’ (King) திரைப்படத்தின் ‘து மில் ஜாயே’ (Tu Mil Jaaye) பாடல், ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் (Ormax Heartbeats) வெளியிட்டுள்ள வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வெளியானது முதலே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்பாடல், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. குறிப்பாக, பாடலின் ஹுக் ஸ்டெப்பை மையமாகக் கொண்டு ஏராளமான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை உருவாக்கிப் பகிர்ந்து வருகின்றனர். இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்பாடல் கவனம் ஈர்த்து வருகிறது.
இப்படத்தில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடித்துள்ள ‘து மில் ஜாயே’ பாடல், இருவரின் அசத்தலான கெமிஸ்ட்ரி, இனிமையான இசை மற்றும் கண்கவர் காட்சிகளால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து திரையில் தோன்றுவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

வாராந்திர இசைத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ள இப்பாடலின் வெற்றி, ‘கிங்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. ஷாருக்கானின் அடுத்த பிரம்மாண்ட படைப்பைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், வரும் டிசம்பர் 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.