அஜித் நடிப்பில் மீண்டும் ஆதிக் இயக்கும் படத்தின் ஹீரோயின் ஸ்ரீலீலா?

Web Ads

‘தல’ அஜித் திரையுலகில் அறிமுகமாகி 33 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. முன்னதாக வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் வரவேற்பிலும் வசூலிலும் மாஸ் காட்டியது. ஆதலால், அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் இயக்கவுள்ளார்.

ஏகே64 படம் குறித்து ‘லப்பர் பந்து’ பட நடிகை ஸ்வாசிகா முக்கியமான ஒரு ரோலில் நடிப்பதாக சொல்லப்பட்டது. தற்போது, இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இளம் நாயகியான ஸ்ரீலீலாவுடன் அஜித் எப்படி நடிப்பார் என்ற கேள்வியும் ஒருபக்கம் இருந்துதான் வருகின்றது. மேலும், ஒரு சிலர் தெலுங்கில் மகேஷ்பாபுவிற்கு ஸ்ரீலீலா ஜோடியாக நடித்து வரும் நிலையில், தமிழில் அஜித்துடன் நடிப்பதில் என்ன? செட்டாகும் என்றும் இணையவெளியில் பதிவிடுகின்றனர்.

ஏகே64 படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியானதும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை சோஷியல் மீடியாவில் கொட்டி தீர்த்து வருகின்றனர். ஆனால், இது அதிகாரபூர்வமாக தகவல் இல்லை. இதற்கு முன்பே அஜித் நடித்து ஆதிக் இயக்கிய ‘குட் பேட் அக்லி’ படத்திலேயே ஸ்ரீலீலா நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அதன் பிறகு அப்படத்தில் ஸ்ரீலீலா கமிட் ஆகவில்லை.

‘குட் பேட் அக்லி’ படத்திலேயே பிளாஷ்பேக் போர்ஷனில் அஜித் இளமையாக வந்ததை திரையில் ரசிகர்கள் கொண்டாடினார்கள். எனவே, கண்டிப்பாக ஸ்ரீலீலா போன்ற இளம் நாயகிகள் அஜித்திற்கு ஜோடியாக நடித்தால் ஏற்றுக்கொள்ளும்படிதான் இருக்கும். அஜித் கார் பந்தயங்களில் கலந்துகொள்ள துவங்கியதில் இருந்தே தன் உடல் எடையை கணிசமாக குறைத்து செம ஸ்லிம்மாக மாறிவிட்டார் எனவும் தீவிர ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆதிக் இயக்கவிருக்கும் ஏகே64 படம் ஹார்பர் சம்பந்தப்பட்ட கதைக்களம் கொண்டது எனவும், வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்கும் எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

adhik ravichandran directed ak64 movie heroine sree leela
adhik ravichandran directed ak64 movie heroine sree leela