பிகில் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘வெறித்தனம்’ பாடல் வீடியோ புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

Verithanam song hit word level record – அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வருகிற தீபாவளியன்று வெளியாகவுள்ளது. விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இப்படத்தின் பாடல் வரி வீடியோவை இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இப்படத்தில் இடம்பெற்ற் ‘வெறித்தனம்’ பாடல் வீடியோவை அவர் நேற்று வெளியிட்டார்.

பிகில் படத்திற்கு பிறகு இந்துஜாவிற்கு அடித்த ஜாக்பாட்.!

இந்நிலையில், இப்பாடல் உலக அளவில் சாதனைகளை படைத்து வருகிறது. இப்பாடல் கடைசி 24 மணி நேரத்தில் அதிகம் பேர் பார்த்த பாடல் பட்டியலில் 5 வது இடத்தை பெற்று சாதனையை படைத்துள்ளது. இதுவரை இப்பாடலை 51 லட்சத்து 78 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதில் 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இதர மொழிகளை ஒப்பிடும்போது இப்பாடல் அதிக லைக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

 

https://platform.twitter.com/widgets.js

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here