பொன்னியின் செல்வன் படத்தை வெங்கட்பிரபு எடுத்து இருந்தால் எப்படி இருக்கும் என நெட்டிசன்கள் கிண்டலடிக்க அதற்கு வெங்கட் பிரபு பதில் அளித்துள்ளார்.

Venkat Prabhu Reaction on Ponniyin Selvan Mems : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் தற்போது தன்னுடைய கனவு படமான பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். முதல் பாகம் கிடைக்கும் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்தை வெங்கட்பிரபு எடுத்திருந்தா??  நெட்டிசன்கள் கிண்டலுக்கு வெங்கட் பிரபு கூறிய பதில்

கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, திரிஷா என பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். யார் யார் என்னென்ன கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறித்த தகவல் புகைப்படத்தோடு வெளியாகியிருந்தது.

இது புதிய சாகாப்தம், இந்தியா பெருமிதம் : ஹாக்கி ஆடவர் அணிக்கு ஜனாதிபதி-பிரதமர் வாழ்த்து

கதாபாத்திரங்களை தேர்வு சரியில்லை என ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர். இதனை வைத்து ஒருவேளை பொண்ணியின் செல்வன் படத்தை வெங்கட்பிரபு இயக்கி இருந்தால் அவளுடைய தம்பி பிரேம்ஜி கதாபாத்திரத்தை நினைத்துப் பாருங்கள். அதற்கு என்னுடைய செலக்சன் எவ்வளவோ மேல் என மணிரத்னம் கூறுவது போல அந்த மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

வருத்தத்தில் இருந்த Yashika-வுக்கு ஆறுதல் கூறிய Vanitha! – என்ன சொன்னார் தெரியுமா? | Car Accident

இதனைப் பார்த்த வெங்கட்பிரபு ஹா ஹா ஹா என சிரித்துவிட்டு அடப்பாவிங்களா என கமெண்ட் அடித்துள்ளார்.