தளபதி 68 பற்றிய கேள்விக்கு பதில் சொல்ல மறுத்துள்ளார் வெங்கட் பிரபு.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சுனைனா நடிப்பில் வெளியாக உள்ள ரெஜினா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது செய்தியாளர்கள் வெங்கட் பிரபுவுடன் தளபதி 68 படம் பற்றி கேள்வி கேட்க அவர் இந்த படம் பற்றி பேசினால் விஜய் திட்டுவார். முதலில் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகட்டும், அதன் பிறகு இந்த படம் பற்றி பேசலாம் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.