Vels Flim International Production's Upcomming Movies List.! | LKG | RJ Balaji | Comali | Jayam ravi | Sumo | Siva | Seeru | jiiva | Tamil Cinema News
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அடுத்ததடுத்து இரண்டு வெற்றி படங்களை களமிறக்கி இருந்த நிலையில் மேலும் மூன்று படத்தை தயாரிக்க உள்ளது.

Vels Flim International Production : தமிழ் சினிமாவில் பல தயாரிப்பு நிறுவனங்கள் படங்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றன, ஆனால் அத்தனை நிறுவனங்களும் வெற்றி படமாக கொடுக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் இதற்கு மாறாக சிறந்த கதைகளாக தேர்ந்தெடுத்து மக்களை கவரும் படங்களாக கொடுத்து வருகிறது ஐசரி கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்.

சில மாதங்களுக்கு முன்பாக ஆர். ஜே பாலாஜி நடிப்பில் வெளியாகி இருந்த LKG படத்தை தயாரித்து வெளியிட்டு வெற்றி கண்டனர். அந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியின் கோமாளி படத்தை தயாரித்திருந்தனர்.

நேற்று உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஒரே நேரத்தில் மேலும் மூன்று திரைப்படத்தை தயாரிக்க உள்ளது வேல்ஸ் நிறுவனம்.

Puppy
Puppy

ஆம் வெகுவிரைவில் வெளியாக உள்ள யோகி பாபுவின் பப்பி படத்தையும் இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் அகில உலக சூப்பர் ஸ்டாரை வைத்து சுமோ என்ற படத்தையும் ஜீவாவை வைத்து சீறு என்ற படத்தையும் தயாரிக்க உள்ளது.

Sumo
Sumo

இந்த நான்கு படங்கள் மட்டுமில்லாமல் இன்னும் நிறைய நிறைய வெற்றி படங்களை தயாரித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர வேண்டும் என வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தை கலக்கல் சினிமா மனதார பாராட்டுகிறது.

Seeru Movie
Seeru Movie
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.