வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவினர்களுடன் நடிகர் விஜய் டிரைவ் செய்து செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவரது நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாக தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் இப்படத்தை இயக்குனர் வம்சி இயக்கியிருந்தார். ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படமாக வெளியான இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 67 திரைப்படம் குறித்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவினருடன் விஜய் டிரைவ் செய்து செல்லும் வீடியோ பதிவு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் பாடல் எழுத்தாளர் விஜய் மற்றும் யோகி பாபுவும் இடம்பெற்றுள்ளனர். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காகி வருகிறது.