பக்கா மாஸ் இன்டர்வெல் தெறி டயலாக் என மாஸ் காட்டியுள்ளது வாரிசு திரைப்படம்.

Varisu Movie Review : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் திரைப்படம் வாரிசு.

வம்சி இயக்க தமன் இசையமைக்க தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயசுதா, யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் என பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Varisu Review : பக்கா மாஸ் இன்டர்வெல், தெறி டைலாக்ஸ்.. But ஒரே மைனஸ் - வாரிசு விமர்சனம்.!!

இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

தொழிலதிபரான சரத்குமார் மற்றும் ஜெயசுதாவுக்கு மொத்தம் மூன்று மகன்கள். நடிகர் சாம் ஸ்ரீகாந்தை தொடர்ந்து மூன்றாவது மகன் தான் தளபதி விஜய்.

முதல் இரண்டு மகன்களும் அப்பாவின் பேச்சைக் கேட்டு பிசினஸை கவனித்து வர தளபதி விஜய் மட்டும் தன்னுடைய சொந்த காலில் தான் நிற்பேன் என வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார். இப்படியான நிலையில் ட்ரைலரில் காட்டப்பட்டது போல குடும்பம் மூன்றாகப் பிரிய அடுத்து விஜய் மீண்டும் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கிறார். அதன் பிறகு நடந்தது என்ன பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

Varisu Review : பக்கா மாஸ் இன்டர்வெல், தெறி டைலாக்ஸ்.. But ஒரே மைனஸ் - வாரிசு விமர்சனம்.!!

படத்தைப் பற்றிய அலசல் :

தளபதி விஜய் வழக்கத்தை காட்டிலும் இந்த படத்தில் இன்னும் மாசான நடிப்பை வெளிப்படுத்தி டயலாக்குகளால் நம்மை கவர்ந்திருக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா அழகு தேவதையாக படத்தில் வலம் வருகிறார். அவருக்கும் விஜய்க்கும் இடையேயான கெமிஸ்ட்ரி காட்சிகளை அழகாக்குகிறது.

தளபதி விஜய்க்கு அடுத்ததாக சரத்குமார், ஷ்யாம் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பில் கவனம் இருக்கின்றனர். பிரகாஷ் ராஜ் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் சிறிது நேரம் வந்து சென்றாலும் மறக்க முடியாத அளவிற்கு சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்பம் :

தமனின் பின்னணி இசை படத்துக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது, பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம்.

ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. எடிட்டிங் கனகச்சிதம்.

Varisu Review : பக்கா மாஸ் இன்டர்வெல், தெறி டைலாக்ஸ்.. But ஒரே மைனஸ் - வாரிசு விமர்சனம்.!!

இயக்கம் :

தெலுங்கு இயக்குனர் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றார் போல எப்படி படத்தை கொடுப்பார் என கேள்வி எழுப்ப அனைவரையும் தனது திறமையான இயக்கத்தால் வாயடைக்க வைத்துள்ளார் வம்சி.

ஆக்சன், எமோஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக படத்தை சிறப்பாக கொண்டு சென்றுள்ளார். சிந்திக்க வைக்கும் மெசேஜ் உடன் படத்தை முடித்தது சிறப்பு.

Varisu Review : பக்கா மாஸ் இன்டர்வெல், தெறி டைலாக்ஸ்.. But ஒரே மைனஸ் - வாரிசு விமர்சனம்.!!

தம்ப்ஸ் அப் :

1. விஜய், சரத்குமார், ஜெயசுதா, ஷாம் நடிப்பு

2. தமன் இசை மற்றும் பாடல்கள்

3. வசனங்கள்

4. இன்டர்வெல் ட்விஸ்ட்

தம்ப்ஸ் டவுன் :

1. முதல் பாதி வேகத்தை கொஞ்சம் கூட்டியிருக்கலாம்.