வாரிசு திரைப்படம் இரண்டு இடங்களில் பெரும் தோல்வியை சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் தமிழகத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இந்த இரண்டு இடங்களில் வாரிசு தோல்வியா? அப்செட்டில் தில் ராஜு - வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழகத்தை போல இந்த படம் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆமாம் விஜயின் கோட்டை என சொல்லப்படும் கேரளாவில் இந்த படம் வசூல் ரீதியாக சறுக்கத்தை சந்தித்ததாக சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் தெலுங்குவிலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த இரண்டு இடங்களில் வாரிசு தோல்வியா? அப்செட்டில் தில் ராஜு - வெளியான அதிர்ச்சி தகவல்

தெலுங்கு மேல் இதுவரை இந்த பணம் 12 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக தில் ராஜு கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.