Varalaxmi Sarathkumar Reply about Rumours
Varalaxmi Sarathkumar Reply about Rumours

விரைவில் திருமணம், கமிட்டான படங்களில் இருந்து விலகல் என்று வரலட்சுமி குறித்து வெளியான தகவல்களுக்கு‌ அவர் பதில் கொடுத்துள்ளார்.

Varalaxmi Sarathkumar Reply about Rumours : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். நினைத்தால் நாயகி தான் என்னை இல்லாமல் முக்கியமான வேடம் என எதுவாக இருந்தாலும் அதில் துணிந்து நடித்து வருகிறார்.

போல்டான நடிகையாக சமுதாயம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்கும் அவர் குரல் கொடுத்து வருகிறார். பெண்களுக்கு பல்வேறு வகைகளில் அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

அஜித் கிங் மேக்கர்.. விஜய்??? – ரசிகர்களின் கேள்விகளுக்கு படபடவென பதிலளித்த பூனம் பாஜ்வா – வைரலாகும் பதிவுகள்?

இப்படியான நிலையில்வரலட்சுமி சரத் குமார் பேட்டி விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இதனால் அவர் கமிட் ஆகியுள்ள படங்களில் இருந்து வெளியேறி வருவதாகவும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இதனையடுத்து தற்போது இந்த தகவல்களுக்கு பதில் அளித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

அதாவது எனக்கு திருமணம் இல்லை. அப்படி திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் நானே மீடியாக்களிடமும்‌ மக்களிடமும் அதை கூறுவேன். அப்படி இருக்கும்போது ஏன் அனைத்து பத்திரிகைகளும் எனக்கு திருமணம் என எழுதுகிறீர்கள்?? கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் எனக்கு திருமணம் அல்ல நான் எந்த படத்தில் இருந்து விலகவும் இல்லை என கூறி வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.

வரலட்சுமி இந்த பதிவிற்கு ரசிகர்கள் பதிவிட்டுள்ள சில கருத்துக்கள் :

ஒரு வதந்தியை பரப்புவதற்கு முன்னர் அவரைப் பற்றி கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களை தவறாக பரப்பாதீர்கள் என கூறியுள்ளார் இந்த ரசிகர்.

இன்னொரு ரசிகர் மக்கள் உங்களை அதிகம் நேசிக்கிறார்கள் என நினைக்கிறேன். அதனால் தான் நீங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவர்கள் ஆசைப்படுகிறார்கள் அது பற்றி தெரிந்து கொள்ளவே இப்படி ஒரு வதந்தி பரப்பி இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

பிரபலங்களுக்கும் பகுதிகளுக்கும் இடையே எப்போதும் அறுபடாத ஒரு இணைப்பு உள்ளது என கூறியுள்ளார் இந்த ரசிகர். பிரபலங்களை பற்றி தொடர்ந்து விதவிதமான வதந்திகள் பரவி கொண்டிருப்பதால் இவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சரி சகோதரி விரைவில் திருமணமாக வாழ்த்துக்கள். விரைவில் உங்களது அம்மாவைப் போல சினிமாவில் வளர வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் இன்னொரு ரசிகர்.

வரு இக்னோர் நெகட்டிவிட்டி.. சில் பண்ணு மாப்பு என விஜய் ரசிகர் ஒருவர் அவரது பங்கிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.