Varalaxmi Sarathkumar Marriage

பிரபல கிரிக்கெட் வீரருடன் வரலட்சுமி சரத் குமாருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Varalaxmi Sarathkumar Marriage : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் விஷாலுடன் காதலில் இருந்து வந்த வரலட்சுமி அதன் பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்.

தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நாயகியாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

தோனி, கோலிக்கு நெருங்கிய நண்பர், பிரபல கிரிக்கெட் வீரருடன் வரலட்சுமிக்கு திருமணம்?? வெளியான தகவல்

இந்த 2021 மட்டும் வரலட்சுமி நடிப்பில் ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இப்படியான நிலையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் வரலட்சுமிக்கும் தோனி, விராட் கோலிக்கு நெருங்கிய நண்பரான கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு யார் இந்த கிரிக்கெட் வீரர் என்பதை வரலட்சுமி அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.