சூர்யாவை தொடர்ந்து வக்கீலாக மிரட்ட உள்ளார் வனிதா விஜயகுமார்.

Vanitha Vijayakumar in Sivappu Manithargal : தமிழ் சினிமாவில் சமுதாயக் கருத்துக்கள் நிறைந்த படங்களுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் இறுதியாக வெளியான ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நடிகர் சூர்யா வக்கீலாக நடித்திருந்தார்.

நான் சிம்பு ஹரிஷ் கல்யாண் மாதிரி பாத்த உடனே அழகா இருக்க மாட்டேன், பாக்க பாக்க தான்! #dhanush #simbu

சூர்யாவைத் தொடர்ந்து வக்கீலாக மிரட்ட போகும் வனிதா விஜயகுமார்.. இணையத்தைக் கலக்கும் புகைப்படங்கள்
விராட்கோலியின் வாழ்க்கை நிகழ்வுகள் : மஞ்ச்ரேக்கர் கருத்து

அதைப்போல் நடிகைகளின் ஜோதிகா, நயன்தாரா என பலர் மத்தியில் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது சிவப்பு மனிதர்கள் என்ற படத்தில் வக்கீலாக நடித்துள்ளார் வனிதா விஜயகுமார். சமூக கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் வனிதாவின் நடிப்பு பாராட்டும் விதத்தில் இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

BTK FILMS சார்பில் B.T அரசகுமார் M.A அவர்கள் தயாரிப்பில் அன்பு சரவணன் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. தற்போது வனிதா வக்கீல் வேடத்தில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.