Vanitha Love With Peter Paul
Vanitha Love With Peter Paul

திருமணத்திற்கு முன்னரே அனிதாவும் அவரது காதல் பீட்டரும் செய்துள்ள வேலை இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vanitha Love With Peter Paul : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். ஏற்கனவே 2 திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற வரும் ஜூன் 27ஆம் தேதி மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

தற்போது வனிதா இயக்கி வரும் யூடியூப் சேனலுக்கு உதவியாக இருக்கும் திரையுலக நண்பரான பீட்டர் பால் என்பவரை மணக்க உள்ளார்.

வனிதாவிற்கு வீடியோ எடுத்து கொடுத்து உதவ சென்ற பீட்டர் பால் அவரிடம் ப்ரொபோஸ் செய்ய வனிதாவின் மகள்களுக்கும் பீட்டர் பாலை பிடித்து போக அவர்கள் சம்மதத்துடன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

முரட்டு சிங்கிள் பிரேம் ஜி-க்கு திருமணம்? பொண்ணு யார்? – வைரலாகும் புகைப்படம்.!

தன்னுடைய அப்பா அம்மாவின் திருமண நாளான ஜூன் 27ஆம் தேதி திருமணம் செய்து கொண்டால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதே தினத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் வனிதா.

இந்த நிலையில் வனிதா தன்னுடைய கையில் பீட்டர் பால் என தன்னுடைய வருங்கால கணவரின் பெயரை பச்சை குத்தியுள்ளார். அதேபோல் பீட்டர் பால் அவரது கையில் வனிதா என வருங்கால மனைவியின் பெயரை பச்சைக் குத்திக் கொண்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

https://www.instagram.com/p/CBrkYzCjJmx/?igshid=e4e4olcec29n

வனிதா செய்யும் இந்த மூன்றாவது திருமணமாவது அவருக்கு மகிழ்ச்சியை தர வேண்டும். வாழ்நாள் முழுவதும் இந்த திருமண பந்தம் நிலைக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தன்னுடைய திருமணம் பற்றி மகள் பதிவிட்ட பதிவை வெளியிட்டு வனிதா மகிழ்ச்சி அடைந்த பதிவு

ரசிகர்கள் முன்னிலையில் திருமணம் குறித்து வாழ்த்தியதையும் அவர் பதிவிட்டுள்ளார்.