குட் பேட் அக்லி படத்தின் வில்லன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
மேலும் அஜித், திரிஷா ,சுனில், ஶ்ரீ லீலா போன்ற பல பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் அஜித்துக்கு வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு மாஸ் வில்லனாக இருந்தது அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. இதில் அஜித் மூன்று வேடங்களில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.